பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரி தேர்தல் துறை சார்பில், சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப் பதிவு வலியுறுத்தி கடற்கரை சாலையில், பொம்மலாட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நுாறு சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி தேர்தல் துறை சார்பில், பொம்மலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தும், ஓட்டு அளிப்பதின் முக்கியம் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை பொதுமக்கள், சுற்றலா பயணிகள் கண்டு களித்தனர்.