மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
29-Nov-2025
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் சார்லஸ் பங்கேற்று, போதைப் பொருள் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். தொடர்ந்து, நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். ஆசிரியர் ஜார்ஜ் வரவேற்றார். ஆசிரியர் மனோஜ் குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை விரிவுரையாளர் கமலா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
29-Nov-2025