மேலும் செய்திகள்
சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் முப்பெரும் விழா
17-Nov-2026
புதுச்சேரி: புதுச்சேரி இன்னர் வீல் சங்கம், புதுச்சேரி காஸ்மாஸ் இன்னர் வீல் சங்கம், புதுச்சேரி கோல்டு இன்னர் வீல் சங்கங்கள் இணைந்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்து, பாதுகாப்பான, அன்பான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் ஆரஞ்சு தினம் 2026 விழா லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ஜிப்மர் மருத்துவமனையின் முன்னாள் குழந்தைகள் நலப் பேராசிரியரும், புதுச்சேரி ஹீமோபிலியா சொசைட்டியின் நிறுவனர் பத்மஸ்ரீ நளினி, இன்னர் வீல் மாவட்டம் 298-ன் மாவட்டத் தலைவி ரேணுபாலா மஹாலிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் தலைமை விருந்தினராக சீனியர் எஸ்.பி., ரச்சனா சிங் பங்கேற்று, கருத்துரை வழங்கினார். பள்ளி முதல்வர் சந்திரன், இன்னர் வீல் சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பொம்மலாட்ட கலைக்குழுவின் நிறுவனர் எலிசபெத் ஏற்பாட்டில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பாலின சமத்துவத்தை வளர்ப்பது மற்றும் சமூகத்தில் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அவசியம் குறித்த விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை மணிமொழி நன்றி கூறினார்.
17-Nov-2026