மேலும் செய்திகள்
பால் உற்பத்தியில் நவீன தொழில்நுட்ப கருத்தரங்கு
09-Oct-2025
புதுச்சேரி: மத்திய அரசின் தேசிய சிறு தொழில் கழகம், புதுச்சேரி தொழில் துறை மற்றும் லக்கோ உத்யேக் பாரத் சார்பில், சிறு, குறு தொழில் முனைவோர் 'டிஜிட்டல் வர்த்தகம்' மூலம் தொழிலை மேம்படுத்துதல் மற்றும் சந்தைபடுத்துதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் தனியார் ஓட்டலில் நடந்தது. கருத்தரங்கை தொழில்துறை அரசு செயலர் விக்ராந்த் ராஜா துவக்கி வைத்தார். தேசிய சிறு தொழில் கழகத்தின் தலைமை மேலாளர் நரேந்திரகுமார், தேசிய சிறு தொழில் கழகத்தின் சேவைகள், சிறு தொழில் செய்வோரின் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தார். சிறு, குறு தொழில் குழு பழனி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் வர்த்தக சேவையின் பயன்கள் குறித்து பேசினார். இதில், புதுச்சேரி லக்கோ உத்யேக் பாரத் தலைவர் விஸ்வேஸ்வரன், அசோக், சுரேஷ்பாபு, சித்ரா பசுபதி, தொழிற்சங்கத்தின் தலைவர்கள், செயலாளர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விக்ரமன் வரவேற்றார். இந்த 'டிஜிட்டல் வர்த்தகம்' சிறு தொழில் செய்வோர் ஆன்லைன் வர்த்தக தளத்தில் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோர், வாங்கும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் சிறு, குறு தொழில் அமைச்சகம் உருவாக்கியது குறிப்பிடத் தக்கது.
09-Oct-2025