உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் ஏ.டபிள்யூ.எஸ்., கிளவுட் கிளப் துவக்க விழா

 மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் ஏ.டபிள்யூ.எஸ்., கிளவுட் கிளப் துவக்க விழா

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் ஏ.டபிள்யூ.எஸ்., (அமேசான் இணைய சேவைகள்) கிளவுட் கிளப் துவக்க விழா நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலை வர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில், தேர்வு கட்டுப்பாட்டாளர், டீன்கள், துறைத் தலைவர்கள், மணக்குள விநாயகர் கல்வி நிறுவனங்களின் பணி நெறியாளர்கள் பங்கேற்றனர். ஏ.டபிள்யூ., எஸ்., சமூக உருவாக்குநர்கள் மற்றும் பல்வேறு தொழில் நுட்ப வல்லுநர்கள், ஆதித்ய, பிரபு ஜெயசீலன், ஸ்ரிதேவி முருகேயன், ரம்யா நடேசன், ஜீவிதா முருகன், அபிஷேக் சுப்ரமணியன், அபிநயா , கீர்த்திவாசன் கண்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு கிளவுட் தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் துறை தேவைகள் மற்றும் உருவாகி வரும் தொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டு உரைகளை வழங்கினர். தொடர்ந்து மாணவர்களுக்கு கலந்துரையாடல் நடந்தது. கல்லுாரி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை 3ம் ஆண்டு மாணவர் விஷ்வா, ஏ.டபிள்யூ., எஸ்., கிளவுட் கிளப் நிறுவனத்தால் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டள்ளார். இதன் மூலம், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி அமைப்பு மாணவர்களுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், டெவ்ஆப்ஸ், டேட்டா இன்ஜினியரிங் போன்ற துறைகளில் நேரடி நடைமுறை அனுபவத்தையும், தொழில் நுட்ப நிபுணர்களின் வழிகாட்டலையும் வழங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை