ஆட்டோ ஸ்டேண்டில் ஆயுத பூஜை
புதுச்சேரி: ஆட்டோ ஸ்டேண்டில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில், தி.மு.க., பிரமுகர் பிரபாகரன் இனிப்புகள் வழங்கினார். முத்தியால்பேட்டையில் உள்ள வீரபத்திர கோவில் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டேண்ட், பெருமாள் கோவில் தெரு மற்றும் மணிக் கூண்டு ஆட்டோ ஸ்டேண்டுகளில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், புதுச்சேரி தி.மு.க., பிரமுகர் பிரபாகரன் கலந்து கொண்டு, ஆட்டோ டிரைவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.