உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆயுர்வேத விழிப்புணர்வு பேரணி

ஆயுர்வேத விழிப்புணர்வு பேரணி

திருக்கனுார் : சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டுசுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது.பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சடகோபன் வரவேற்றார்.நிகழ்சியில், சோரப்பட்டு ஆரம்ப சுகாதார மருத்துவமனையின், ஆயுர்வேத மருத்துவர் காங்கேயன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவம், உணவே பிரதான மருந்து, மூலிகை செடிகளின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கிய வாழ்விற்கான ஆயுர்வேத மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தொடர்ந்து, பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்ற ஆயுர்வேத விழிப்புணர்வு பேரணியை ஆயுர்வேத மருத்துவர் காங்கேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஆசிரியர் மாணிக்கவேல் தொகுத்து வழங்கினார்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சூரியகுமாரி, ஜீவாதேவி, ராஜேந்திரன், இளவரசி, நுாலகர் லட்சுமணன், கணினி பயிற்றுநர் மதுபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ