உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆயுர்வேத மருத்துவம் விழிப்புணர்வு பேரணி

ஆயுர்வேத மருத்துவம் விழிப்புணர்வு பேரணி

பாகூர்: தேசிய ஆயுர்வேத தினத்தின் ஒரு பகுதியாக, பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆயுர்வேத பிரிவு சார்பில், ஆயுர்வேத மூலிகை கண்காட்சி நடந்தது.அதனை தொடர்ந்து, சேலியமேடு கிராமத்தில், ஆயுர்வேத மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை, பாகூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி ஆனந்தவேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஆயுர்வேத மருத்துவர் புவனேஸ்வரி பேரணியை வழி நடத்தினார். பேரணியில், சுகாதார ஊழியர்கள், சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டு, ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவம் குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைளை ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை