மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்
அரியாங்குப்பம்: ஐயப்ப பக்தர்கள் இன்று (நவ.,17) அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். கடலுார் சாலை அரியாங்குப்பத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. கார்த்திகை மாதம் முதல் தேதியையொட்டி, கோவிலில், குரு சாமிகள், ஐயப்ப பக்தர்களுக்கு இன்று அதிகாலையிலேயே மாலை அணிவித்தனர். பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்து, தங்களது விரதத்தை துவக்கினர். தொடர்ந்து, ஐயப்பன் சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து, மகா தீபாரானை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.