கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, திட்ட அதிகாரி ஆறுமுகம் தலைமை தாங்கினார். நலத்திட்ட அதிகாரி நிர்மலாதேவி வரவேற்றார். கோவிலில் பூஜை செய்து, அங்கன்வாடி ஊழியர்கள், உறவினர்கள் சீர்வரிசை தட்டுகளை எடுத்து சென்றனர். பின், கர்ப்பிணிகளுக்கு, வளையல் அணிவித்து, நலுங்கு வைத்து, ஆசி வழங்கினர்.பாகூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆனந்தவேலு, மருத்துவர்கள் எழிலரசி, புவனேஸ்வரி, தேவி ஆகியோர் கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய உணவுகள், தேவையான ஊட்டசத்துகள் மற்றும் கர்ப்பகால பராமரிப்பு குறித்து விளக்கினர். அங்கன்வாடி ஊழியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.