உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத அவலம்

பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத அவலம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால் கஷ்டப்பட்டு வருகின்றனர். புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தில் ஒரு சிறப்பு அதிகாரி மற்றும் 52 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 32 சீனியர் ஊழியர்கள் மற்றும் 20 பேர் தின கூலி ஊழியர்கள். இந்த துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேலாளர் நியமிக்காமல் உள்ளனர். மேலும் இந்த துறையை சேர்ந்த 25 ஊழியர்கள் வாய்மொழி உத்தரவாக பல்வேறு துறைகளில் டெபுடேஷ்னில் சென்று வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் சம்பளம் பெற்று வருகின்றனர். மேலும் தற்போது தீபாவளி போனஸ் பெற்று உள்ளனர். ஆனால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தை சேர்ந்த டெபுடேஷனில் சென்றுள்ள ஊழியர்கள் உள்ளிட்ட 52 பேர்களுக்கும் கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால் ஊழியர்கள் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ஊழியர்களுக்கு தடைபட்டுள்ள மூன்று மாதத்திற்கான சம்பளத்தை வழங்கி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை