உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இறகுப் பந்து போட்டி பரிசளிப்பு விழா-

 இறகுப் பந்து போட்டி பரிசளிப்பு விழா-

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. புதுச்சேரி ரோட்டரி எலைட்ஸ் மற்றும் பிரெஞ்சு பெதர் லீக் சார்பில் இறகுப் பந்து போட்டி, புதுச்சேரி சிவாஜி சிலை அருகில் உள்ள ஆடுகளம் அகாடமியில் 2 நா ட்கள் நடந்தன. இப்போட்டியில் புதுச்சேரி, தமிழகம், கேரளா மாநிலங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டி 9,11,13,15, 17 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் தனி நபர் மற்றும் இரட்டையர் என நடத்தபட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் ரோட்டரி சங்க தலைவர் சரவணன், செயலாளர் தமிழ்க்கண்ணன், பார்த்திபன், சேகர், முன்னாள் தலைவர் சந்திரசேகர், விளையாட்டு பிரிவு தலைவர்கள் ரவிக்குமார், பிரபாகரன், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ