உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேக்கரி ஊழியர் தாக்கு

பேக்கரி ஊழியர் தாக்கு

அரியாங்குப்பம் : கடலுார் அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 25; தவளக்குப்பம் அருகே உள்ள பூரணாங்குப்பம் பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் இவருடன் வேலை செய்யும் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வேலை முடித்து விட்டு தவளக்குப்பம் சாலையில் நடந்து சென்றனர். அவ்வழியாக இரண்டு போர், பைக்கில் வேகமாக வந்தனர். ஏன் வேகமாக செல்கிறீர்கள் என பாலகிருஷ்ணன் கேட்டார். ஆத்திரமடைந்து பைக்கில் வந்த, பூரணாங்குப்பத்தை குருமூர்த்தி, தர்மா ஆகியோர் பாலகிருஷ்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, குருமூர்த்தி உட்பட இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை