பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
புதுச்சேரி : பக்ரீத் பண்டிகையையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.பக்ரீத் பண்டிகையொட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஏளாளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கொண்டனர்.அதே, போல், புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது.இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வில்லியனுார் அருகே உள்ள சுல்தான்பேட்டை முகமதியா பள்ளி வாசல் முன்பு திறந்தவெளி அரங்கில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. அதில், ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.