மேலும் செய்திகள்
உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்
26-Jun-2025
உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்களின் இறுதி நிலைகளான விருக்ஷ ஆசனம் மற்றும் விருக்ஷ கிரியை ஆசனங்களின் செயல்முறைகளை இந்த வாரம் பார்ப்போம். விருக் ஷ ஆசனம்
சமஸ்திதி நிலையில் இருந்து இடது காலை சமநிலைப்படுத்த, வலது காலை முட்டியில் மடித்து இடது கையால், வலது கால் விரல்களை பிடித்து உள்ளங்காலை வெளிநோக்கியபடி திருப்பி தொலையில் எவ்வளவு மேலே முடியுமோ அவ்வளவு மேலே வைக்கவும். வலது கால் முட்டியும், இடது கால் முட்டியும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாது.இடது காலை சமநிலைப்படுத்தி இந்த முறையில் கைகளை மார்பின் முன்னே நமஸ்கரிக்க வேண்டும். இந்த நிலையில், 10 வரை எண்ணும் வரை நின்றபின், வலது கையால், கால்களை தொடையில் இருந்து எடுத்து கீழே இறக்கம்.நீண்டு சுவாசித்து சமஸ்திதி நிலையில் சிறுது நேர ஓய்விற்கு பின், இதே ஆசனத்தை இடது பக்கம் செய்து, பின் இருக்கங்களில் இருமுறை திரும்ப செய்யவும். விருக் ஷ கிரியை
விருக்ஷ ஆசனத்தில் இருந்து ஒரு கிரியை வழங்க முடியும். இதில், மரக்கிளைகளை போல் கைகளை நீட்டி, ஒரு காலில் நின்றி விருக்ஷாசன நிலையில், கைகளினால் பல முத்திரைகளை மாற்றி செய்யலாம்.விருக் ஷாசன நிலைக்கு வந்து மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் துாக்குவது அஞ்சலி முத்திரை.மூச்சை வெளியிட்டு கைகளை கீழிறக்கி இரு தோள்களின் நேரே வைக்கவும். மூச்சை உள்ளிழுத்து உள்ளங்கைகளை சேர்த்த நிலையில் முன்னோக்கி நீட்டவும். இது ஆக்ர முத்திரை. மூச்சை வெளியிட்டு மீண்டும் நமஸ்கார நிலைக்கு மார்பின் முன்னே கொண்டு வரவும். இது ஒரு சுற்று.இவ்வாறு மூச்சையும், கைகளின் அசைவுகளையும் இணைந்து மூன்று சுற்றுகள் செய்து, காலை மாற்றி மறு பக்கம் அதேபோல் செய்யவும். உடலின் மேல் பகுதியில் சக்தியின் சுறல்கள் இந்த கிரியை உண்டாக்குகிறது.அடுத்து வாரம் சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் ஆசன முறைகளை பார்ப்போம்...விருட்சாசனம் சமநிலையை மேம்படுத்துகிறது. மேலும், நிலைத்தன்மையை அதிகரிக்கிறது. கால் மற்றும் மையப்பகுதியை பலப்படுத்துகிறது. கவனம் மற்றும் ஒருமைப்பாட்டை அதிகரிப்பதோடு, மனஅழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்கிறது.விருக் ஷ கிரியா சமநிலை மற்றும் கவனத்தை அதிகரிக்கிறது. நரம்புத்தசை ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது. உடல் விழிப்புணர்வை வளர்க்கிறது. மன அமைதியைத் துாண்டுகிறது. கருணை மற்றும் உடல் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது. மேலும், சுவாச மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
26-Jun-2025