உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையம், அமைதி நாதர் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பாலசுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அய்யங்குட்டிப்பாளையம் சிவசக்தி நகரில் அமைதி நாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திர காவடி உற்சவம் மற்றும் திருகல்யாண வைபவம் நேற்று நடந்தது.இதையொட்டி, காலை காவடி அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.இதில், திராளன பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை