மேலும் செய்திகள்
தேள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு
03-Oct-2024
உடல் நலம் சரியில்லாததால் வாலிபர் தற்கொலை
02-Oct-2024
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் வறுமையின் காரணமாக, ஷவர்மாவில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்டவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.புதுச்சேரி, லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் சாதிக்பாஷா, 52; டீ டைம் கடை நடத்தி வந்தார். இவருக்கு, கடந்த முன்று ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக வீடு மற்றும் மனைவியின் நகைகளை விற்று கடனை அடைத்துவிட்டு தற்போது, வறுமையில் வசித்து வந்துள்ளார்.இதன் காரணமாக, மனமுடைந்து காணப்பட்ட சாதிக்பாஷா கடந்த 18ம் தேதி இரவு இ.சி.ஆரில் உள்ள தனியார் ஓட்டலில் ஷவர்மா வாங்கி, அதில் எலி பேஸ்ட்டை கலந்து மது அருந்தியபடி சாப்பிட்டுள்ளார்.இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாதிக்பாஷா, நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
03-Oct-2024
02-Oct-2024