வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை பேண்ட் மாஸ்டருக்கு 3 ஆண்டு கடுங்காவல்
புதுச்சேரி: வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பேண்ட் மாஸ்டருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, போக்சோ விரைவு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரி, சாரம் சக்தி நகர், முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் மகன் ரமேஷ் (எ) ரமேஷ்குமார்,34; பேண்ட் மாஸ்டரான இவர், கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, வீடு புகுந்து தனிமையில் இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், ரமேைஷ கைது செய்த உருளையன்பேட்டை போலீசார், அவர் மீது போக்சோ விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், அரசு தரப்பில், வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி நேற்று வழங்கிய தீர்ப்பில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேண்ட் மாஸ்டர் ரமேஷ் (எ) ரமேஷ்குமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.