உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வங்கி போலி லிங்கை பயன்படுத்தி 4 பேரிடம் ரூ.79 ஆயிரம் மோசடி

வங்கி போலி லிங்கை பயன்படுத்தி 4 பேரிடம் ரூ.79 ஆயிரம் மோசடி

புதுச்சேரி,; தனியார் வங்கி பெயரில் போலி லிங்க் அனுப்பி, 4 பேரிடம் 79 ஆயிரத்தை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, தனியார் வங்கியின் லிங்க் ஒன்று வந்தது. அதனை வெங்கடேசன் பதிவிறக்கம் செய்து, தனது வங்கி விவரங்களை பதிவிட்டார். சிறிது நேரத்தில் வெங்கடேசன் வங்கி கணக்கிலிருந்த 23,000 ரூபாயை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இதேபோல், ரெயின்போ நகர் விக்னேஷ் விஷ்ணு என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 27,000, புதுச்சேரி, கிழக்கு சன்னதி வீதி கிருஷ்ணகுமாரிடம் 19,500, ராஜேஷிடம் 10,100 ரூபாயை மோசடி செய்துள்ளனர்.மேலும், காரைக்கால் அபிநவ் குமார் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், தனியார் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, தங்களது பில் பாக்கியை செலுத்துமாறு கூறியுள்ளார். இதைநம்பி, அபிநவ் குமார் 19 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.அரியாங்குப்பம் வேளாங்கன்னி 3,400, சீனிவாசன் 2,000, ரெட்டியார்பாளையம் செந்தில்குமார் 6,000, மூர்த்திக்குப்பம் ராஜ்குமார் 5,000 என, 9 பேர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர். புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை