உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வங்கியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம்

வங்கியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம்

புதுச்சேரி : மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், புதுச்சேரியில் கூட்டம் நடந்தது.புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில், இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் ஷிவ் பஜ்ரங் சிங், அரசு செயலர் ஆஷிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி பங்கேற்றனர். புதுச்சேரி மாநில இந்தியன் வங்கியின் 2025-26ம் நிதியாண்டிற்கான 12 ஆயிரத்து 100 கோடி கடன் திட்டம் வெளியிடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், நபார்டு வங்கி பொது மேலாளர் ஆனந்த், ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ராஜ்குமார், இந்தியன் வங்கி பொது மேலாளர் சந்திரசேகரன், சதீஷ்குமார், சித்தார்த்தன், பத்மாவதி, ஸ்ரீகாந்த் உட்பட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ