வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம்
புதுச்சேரி:அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தமிழ் மாநில குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, புதுச்சேரி மாவட்ட செயலாளர் சரவணன், இணை செயலாளர்கள் லீலாவதி, ஜேக்கப், நிர்வாகிகள் ருக்மணி, சத்யா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் 28ம் தேதி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது என முடிவு செய்யப்பட் டுள்ளது. தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலத்தைப் போல புதுச்சேரியிலும் வழக்கறிஞர்களுக்கான ஓய்வு ஊதியமாக 20 ஆயிரம் ரூ பாய் வழங்க வேண்டும். டில்லி அரசை போல புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வழக்கறிஞர்களுக்கு வீட்டு வசதி வாரியம் ஏற்படுத்தி தர வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.