உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய சட்டத்துறை அமைச்சருடன் வழக்கறிஞர் கூட்டமைப்பு சந்திப்பு

மத்திய சட்டத்துறை அமைச்சருடன் வழக்கறிஞர் கூட்டமைப்பு சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உடன் சந்திப்பு நிகழ்ச்சி புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நடந்தது. வழங்கறிஞர் சங்கத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பேசுகை யில், 'புதுச்சேரியில் உயர்நீதிமன்றம் கிளை அமைக்கவும், கடன் மீட்பு தீர்ப்பாயம் மற்றும் சமரச மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கறிஞர்கள் அலுவலக அறை கட்டுமான பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார். பின், புதுச்சேரியில் பதிவு செய்யப்படும் வழக்குகள், வழக்கறிஞர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களை் மத்திய அமைச்சர் கேட்டறிந்தார் அப்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கும்போது புதுச்சேரி வழக் கறிஞர் தகுதியுடைவர்களின் பெயர்களை பரிசீலிக்க வேண்டும் என, வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர், தெரிவித்தார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் இந்துமதி, புவனேஸ்வரி, செயலாளர் நாராயணன் குமார், பொருளாளர் ராஜபிரகாஷ் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். சங்க பொதுச் செயலாளர் நாராயணகுமார் நன்றிதெரிவித்தார். இதனிடையே புதுச்சேரி பா.ஜ., சார்பில் இன்று நடைபெறும் கூட்டத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்கிறார். இதற்காக நேற்று புதுச்சேரி வந்த அவரை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் கோரிமேட்டில்வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை