உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரில் மோதல் : 2 பேர் மீது வழக்கு

பாரில் மோதல் : 2 பேர் மீது வழக்கு

வில்லியனுார் : வில்லியனுார் அருகே கரிக்கலாம்பாக்கம்- மடுகரை மெயின் ரோடு கோர்க்காடு ஏரிக்கரை சாலை சந்திப்பு பகுதியில் எம்.எஸ்.ஜி மதுபான பார் உள்ளது. இந்த பாரில் கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த கண்ணியப்பன் மகன் ஹரிநாராயணமூர்த்தி,34; டிரைவரான இவர் நேற்று முன்தினம் பகல் 1:00 மணியளவில் மது அருந்திகொண்டிருந்தார். அப்போது செம்பியபாளையத்தை சேர்ந்த ராஜாராம் மகன் சுரேஷ் மற்றும் வேல்முருகன் மகன் பிரதாப் ஆகியோர் சேர்ந்து பக்கத்து டேபிளில் அமர்ந்து மது அருந்தினர். இருதரப்பிற்கும் திடீர் என பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் சேர்ந்து ஹரிநாராயணமூர்த்தியை சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் சுரேஷ் மற்றும் பிரதாப் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ