உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேங்காய்திட்டு துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு

தேங்காய்திட்டு துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், தேங்காய்திட்டு துறைமுகத்தில் விசைப்படகுகள் நேற்று வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.தென்கிழக்கு வங்கக்கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நேற்று (14ம் தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியது. மேலும், அது வலுவடைந்து தெற்கு ஆந்திர, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று (14ம் தேதி) முதல் வங்க கடலில் காற்றின் வேகமாக அதிகரித்து காணப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், தங்களது 100க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை தேங்காய்திட்டு துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர்.மேலும், சில மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், தங்களது வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ