உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.பாளையம் அரசு உயர்நிலை பள்ளி மைதானத்தில் அடிப்படை வசதி தேவை

எம்.பாளையம் அரசு உயர்நிலை பள்ளி மைதானத்தில் அடிப்படை வசதி தேவை

திருபுவனை: மதகடிப்பட்டு பாளையம் அரசு உயுர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு பாளையத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு போதிய கட்டட வசதிகள், விசாலமான விளையாட்டு மைாதனம் உள்ளது. ஆனால் பள்ளி விளையாட்டு மைதானம் மாணவ-மாணவிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு செடிகொடிகள் முளைந்து புதர் மண்டிக் கிடப்பதுடன், மழைக்காலங்களில் மைதானம் சேறும் சகதியமாக மாறிவிடுவதால் மாணவ-மாணவிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.பள்ளிக்கு கிழக்கே போக்குவரத்து சாலையோரம் 50 மீட்டர் நீளத்திற்கு சுற்றுமதில் வசதி இல்லாமையால் வார விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்கு புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பள்ளிக்கு மேற்கிலும், வடக்கிலும் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல தனி நபர்கள் பள்ளி மைதானத்தின் வழியே டிராக்டர் மற்றும் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.எனவே வெளிநபர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகாதவாறு சுற்றுச் சுவர் அமைத்து, மைதானத்தை சீரமைத்து மாணவ-மாணவிகள் விளையாட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !