லாரியில் பேட்டரி திருட்டு
நெட்டப்பாக்கம்; லாரியில் பேட்டரி திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், வி.புதுார் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 38; லாரி டிரைவர்.இவர் தனது லாரியை கடந்த 22ம் தேதி காலை ஏரிப்பாக்கம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்திருந்தா்.கடந்த 31ம் தேதி மீண்டும் லாரியை எடுக்க வந்தபோது, லாரியில் இருந்த பேட்டரியை காணவில்லை. இதுகுறித்து அவர் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.