மேலும் செய்திகள்
உடுப்பியில் முக்கிய கடற்கரைகள்
28-Aug-2025
புதுச்சேரி : புதுச்சேரி அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமம், கடற்கரை மேலாண்மை அதிகார அமைப்பு சார்பில், சர்வதேச கடற்கரை துாய்மை தினத்தை முன்னிட்டு, இந்திய அரசின் தேசிய நிலைத்த கடலோர மேலாண்மை மையம் மூலம் பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம், வீராம்பட்டினம் கடற்கரை பகுதிகளில் கடற்கரை துாய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது. கடற்கரை துாய்மை பணியினை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மத்திய சுற்றுச்சூழல், வனம், மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், சென்னை வன துணை ஆய்வாளர் யுவராஜ், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச் சூழல் துறை மூத்த அறிவியல் அதிகாரி சகயா ஆல்ப்ரட், மாசு கட்டுப்பாட்டு குழுமம் உறுப்பினர் செயலர் ரமேஷ், அரியாங்குப்பம் ஆணையர் ரமேஷ், மீனவளத்துறை இணை இயக்குநர் கோவிந்தசாமி, மாசு கட்டுப்பாட்டு குழு விஞ்ஞானி விபின்பாபு, இளநிலை பொறியாளர் புகழேந்தி, இளநிலை ஆய்வக உதவியாளர் இளங்கோ, கடற்கரை மேலாண்மை அதிகார அமைப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு குழும அதிகாரிகள் கலந்து கொண்டனர். ராஷ்ட்ரீயரக் ஷா பல்கலைக் கழகம், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் என்.எஸ்.எஸ்., மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் அரசு ஊழியர்கள் என 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, 850 கிலோ குப்பைகள் சேகரித்து, மறு சுழற்சிக்காக குரும்பாபேட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
28-Aug-2025