உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்கை லாந்தர் குளோ பெஸ்ட் நிகழ்ச்சி  குப்பை களமாக மாறிய கடற்கரை

ஸ்கை லாந்தர் குளோ பெஸ்ட் நிகழ்ச்சி  குப்பை களமாக மாறிய கடற்கரை

அரியாங்குப்பம் : தனியார் நிறுவனம் நடத்திய குளோ பெஸ்ட், என்ற ஸ்கை லாந்தர் நிகழ்ச்சியால் ஏற்பட்ட குப்பைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. புதுச்சேரியை சேர்ந்த 4 தனியார் நிறுவனம் சுற்றுலாத்துறை அனுமதியுடன் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் ரூபி பீச்சில், குளோ பெஸ்ட் 25 என்ற ஸ்கை லாந்தர் (வான விளக்கு) நிகழ்ச்சியை நேற்று முன்தினம் இரவு நடத்தியது.இந்த நிகழ்ச்சிக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றலா பயணிகள் ஸ்கை லாந்தர் பொருளை பணம் கொடுத்து வாங்கி வானத்தில், பறக்க விட்டனர். ஸ்கை லாந்தர் பேப்பர், பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் விற்ற உணவு பொருட்களின் பிளாஸ்டி பிளேட்கள், காலி வாட்டர் பாட்டில்கள் ஆங்காங்கே கடற்கரை பகுதியில் சிதறி குப்பை களமாக மாறியுள்ளது.கடற்கரையை துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தனியார் நிறுவனங்கள் இது போன்ற நிகழ்ச்சியை நடத்தி விட்டு, குப்பைகளை பெயரளவில் அகற்றி விட்டு செல்கின்றனர்.தனியார் நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு சுற்றுலாத்துறை அனுமதி வழங்கும் முன்பாக, குப்பை தொட்டிகள் வைக்க அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள் வீசி செல்லும் குப்பைகளை முறையாக அகற்றவில்லை எனில் அந்த நிறுவத்தின் மீது அபராதம் விதிக்க வேண்டும். என சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை