உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிச்சைக்காரர் வேடமிட்டு மதுக்கடையை உடைத்து திருட்டு

பிச்சைக்காரர் வேடமிட்டு மதுக்கடையை உடைத்து திருட்டு

புதுச்சேரி ஆசாமி கைது: ரூ. 1.31 லட்சம் பறிமுதல் புதுச்சேரி: பிச்சைக்காரர் வேடத்தில் மதுக்கடையை உடைத்து 2 லட்சம் பணம் திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள தனியார் மதுபான கடையின் பூட்டை உடைத்து, கடந்த 4ம் தேதி, ரூ. 2 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது. கடை ஊழியர் லட்சுமணன் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுபான கடை அருகில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, குப்பை பொருக்கும் பிச்சைக்காரர் போல், கையில் பையுடன் ஒருவர் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.மர்ம நபரின் அடையாளத்தை வைத்து விசாரித்தபோது, மதுபான கடையை உடைத்து திருடிய நபர், அவர்தான் என. தெரியவந்தது. அவர், புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த மனோகர், 62; என்பது தெரியவந்தது. புதுச்சேரியில் கடந்த 2010 முதல் 2013 வரை பெரியக்கடை, முத்தியால்பேட்டை, காலாப்பட்டு பகுதியில் 5 திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்துள்ளார். வழக்குகள் முடிந்ததும், தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரி, திருக்காட்டுபுலியூர் மெயின்ரோட்டில் குடியேறியுள்ளார். தஞ்சாவூர் சென்ற போலீசார் மனோகரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.எஸ்.பி., ரகுநாயகம் கூறுகையில், பழைய குற்றவாளியான மனோகர், தமிழகத்தில் குடியேறி இருந்தாலும், பண நெருக்கடி காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்து திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளார். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, பிச்சைக்காரர் போல வேடமிட்டு கடந்த 15 நாட்களாக புதுச்சேரி வீதி கடைகளை நோட்டமிட்டு வந்துள்ளார். கடந்த 4ம் தேதி இரவு மதுபான கடையை உடைத்து, பணத்தை திருடிச்சென்றார்.பாதி பணத்தை வம்பாக்கீரப்பாளையத்தில் உள்ள தாய் வீட்டிலும், மீதி பணத்தை தஞ்சாவூர் கொண்டு சென்று அடகு வைத்திருந்த வெள்ளி கை செயினை மீட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மனோகரிடமிருந்து 1 லட்சத்து 31 ஆயிரத்து 570 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மனோகரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, சந்திரசேகர், லட்சுமிநாராயணன், உதவி சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், பெரியண்ணசாமி, சுரேஷ், ஏட்டுகள் வீரமணி, கருணாகரன், சத்தியமூர்த்தி, ஸ்ரீராம், காவலர்கள் அர்ஜூன், மோகன் ஆகியோரை சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., ரகுநாயகம் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை