உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  யாசகம் இல்லாத புதுச்சேரி விழிப்புணர்வு ஊர்வலம்

 யாசகம் இல்லாத புதுச்சேரி விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரியை யாசகம் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், சமூக நலத்துறை மற்றும் ஷேரன் சொசைட்டி சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் 'ஸ்மைல்' திட்டத்தின் கீழ், புதுச்சேரி சமூக நலத்துறை மற்றும் ஷேரன் சொசைட்டி இணைந்து இந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. ராஜிவ் சந்திப்பு அருகில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, சமூக நலத்துறை இயக்குநர் ராகிணி தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். கள அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். நகரின் முக்கிய சந்திப்புகளில் யாசகம் எடுப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சடகுளத்து ஐயனாரப்பன் கலைக்குழுவினரின்' கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரியை யாசகம் இல்லாத ஒரு முன்மாதிரி நகரமாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஷேரன் சொசைட்டியின் நிறுவனர் மோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ