உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெத்தி பயணீர் அகாடமி துவக்கம்

 பெத்தி பயணீர் அகாடமி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் கல்வி நிறுவனமான பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவ, மாணவியருக்கான நீட், ஜே.இ.இ., சி.ஏ., பயிற்சி மையம் துவக்க விழா நடந்தது. புதுச்சேரி - கடலுார் உயர்மறை மாவட்ட ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கி, 'பெத்தி பயணீர் அகாடமி' பயிற்சி மையத்தை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் முன்னிலை வகித்தார். மறைமாவட்ட முதன்மை பேராயர் குழந்தைசாமி, மறைமாவட்ட பொருளாளர் பிலோமின்தாஸ், மறைமாவட்ட கல்வி ஆணைய செயலர் பீட்டர் ராஜேந்திரம், அசிஸ் சவர்க்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு பயிற்சி மையத்தின் பெயரிலான சீருடை வழங்கப்பட்டது. இந்த மையம் மாணவ, மாணவியர் சிறந்த மருத்துவர், பொறியியல் வல்லுனர்கள் மற்றும் பட்டயக் கணக்காளர்களை உருவாக்குவது நோக்கமாகும். மாணவர்கள் தங்கள் அறிவு திறனை மேம்படுத்தி, பாடங்களைப் பற்றிய ஆழ்ந்த புரிதல்களைப் பெறவும், கடினமாகப் படித்து வெற்றியின் பாதையில் பயணிக்க பயிற்சி மையம் சிறந்த வழிகாட்டியாக அமையும். இந்திய அளவில் சிறந்த ஐ.ஐ.டி., ஆசிரியர்களைக் கொண்ட பயிற்சி நிறுவனமான 'பிரிப் எஜிக்கேஷன்' (PREP EDUCATIONS) நிர்வாக இயக்குநர் அசிஸ் சவர்க்கர் கூறுகையில், இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவரையும், தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பதற்கான நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற பயிற்சி அளிக்கப்படும். மேலும், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மா ணவர்களுக்கு பிரிவு - I (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்), (கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்), பிரிவு - II (இயற்பியல், வேதியியல், உயிரியல், தகவல் தொழில்நுட்ப நடைமுறைகள்), பிரிவு - III (பிசினஸ் ஸ்டடீஸ், கணக்கியல், பொருளாதாரம், அலைடு கணிதம், ஐ.பி., கம்ப்யூட்டர் சயின்ஸ்) ஆகிய பாடங்களில் சிறப்பு பயிற்சி கள் அளிக்கப்படும் என்றார். பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் கூறுகையில், 'புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 'பெத்தி பயணீர் அகாடமி'யில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் டிசம்பர் 14ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கும். சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 100 சதவீதம் கலர்ஷிப் வழங்கப்படும்' என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை