மேலும் செய்திகள்
பார்வையாளர்களை கவர்ந்த மாணவியரின் நடனம்
21-Apr-2025
புதுச்சேரி: புதுச்சேரி, சுந்தர நாட்டிய கேந்திரா நாட்டியபள்ளி சார்பில் பரதநாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சி, மேரி உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடந்தது.இதில், பள்ளியில் பயின்ற மாணவிகளின் பல்வேறு நடன நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நேரு எம்.எல்.ஏ., மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, சிறப்பாக நடனம் ஆடிய மாணவி வருண பாலாவிற்கு, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.ஏற்பாடுகளை சுந்தர நாட்டிய கேந்திரா நாட்டிய பள்ளியின் சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.
21-Apr-2025