பாரதிதாசன் அறக்கட்டளை மாத விழா
புதுச்சேரி: பாரதிதாசன் அறக்கட் டளை சார்பில், 83வது மாத விழா நடந்தது. பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், தாய் மொழித்தமிழும், பாவேந்தர் பாரதிதாசனும் என்ற தலைப்பில் நடந்தது. அறக்கட்டளைத் தலைவர் பாரதி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அறக்கட்டளை செயலர் வள்ளி, நமச்சிவாயம், மாணிக்கம், ராசாராம், சுசீலா, விசாலாட்சி, அருள் ஜோதி, பானுமதி, பேராசிரியர் விசாலாட்சி, லட்சுமிதேவி, ராஜேஷ், ஏகாம்பரம் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், தமிழகம், புதுச்சேரியில் இருந்து கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர்.