தார் சாலை அமைக்க பூமி பூஜை
காரைக்கால்:காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் ரூ.19.38 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. காரைக்கால் நெடுங்காடு கோட்டுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி உட்பட்ட நெடுங்காடு கொம்மின் பஞ்சாயத்து மூலம் ரூ.19.38.466 லட்சம் மதிப்பில் நெடுங்காடு எம்.ஜி.ஆர் .,காலனி பகுதியில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் தொகுதி எம்.எல்.ஏ., சந்திர பிரியங்கா தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் என்.ஆர்.காங்., பிரமுகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.