மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
11-Nov-2026
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், சுப்பையா அரசு உயர்நிலைப் பள்ளியில், கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உழவர்கரை எம்.எல்.ஏ., நாராயணசாமி தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரிஸ் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
11-Nov-2026