தலைமறைவு குற்றவாளிக்கு பிடிவாரன்ட்
புதுச்சேரி: கஞ்சா விற்பனை வழக்கில், போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்து போடாமல் தலைமறைவான குற்றவாளிக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தது.ஏனாம் அடுத்த குரசம்பேடா பகுதியை சேர்ந்தவர் பல்லாலோவராஜ். இவரை பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் ஏனாம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.ஏனாம் கோர்ட் அவ ருக்கு ஜாமின் வழங்கி, ஏனாம் போலீஸ் ஸ்டேஷனில், கையெழுத்து போட வேண்டும் என, நிபந்தனையுடன், உத்தரவிட்டது. இதையடுத்து, ஏனாம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த மாதம் 21ம் தேதி முதல் கையெழுத்து போடாமல் தலைமறைவானார். அவருக்கு ஏனாம் கோர்ட் வழங்கிய ஜாமினை ரத்து செய்து, பிடி வாரண்ட் பிறப் பித்து உத்தரவிட்டது. தலைமறைவாக உள்ள பல்லாலோவராஜை ஏனாம் போலீசார் தேடி வருகின்றனர்.