பீகார் தேர்தலில் வெற்றி: பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கல்
புதுச்சேரி: பீகார் தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, புதுச்சேரியில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில் மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் இந்திரா சதுக்கம் அருகே பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், தீப்பாய்ந்தான், செல்வம், ராஜசேகர், விஸ்கிட் பாரத் நிபுணர் சுவ்ரோகமல் தத்தா உட்பட பலர் பங்கேற்றனர். மாநில தலைவர் ராமலிங்கம் கூறுகையில், 'பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்., பொய் பிரசாரத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளனர். இதேபோல், புதுச்சேரியில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்' என்றார்.