பைக் மாயம்
புதுச்சேரி: குயவர்பாளையம், பழைய அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் புவனேஷ், 19; மதகடிப்பட்டு தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து கொண்டு, முத்தியால்பேட்டை, ஏழைமாரியம்மன் கோவில் சந்திப்பு அருகேயுள்ள தனியார் ஓட்டலில் பகுதி நேர வேலை செய்து வருகிறார். கடந்த 15ம் தேதி தனது பைக்கை (பி.ஓய் 01 சி.என். 3517) வேலை செய்யும் ஓட்டல் எதிரே நிறுத்திவிட்டு, வேலை முடிந்து நேற்று முன்தினம் (16ம் தேதி) காலை வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்துவிசாரித்து வருகின்றனர்.