பைக் திருட்டு
புதுச்சேரி : மார்க்கெட் கமிட்டி எதிரில் நிறுத்திய பைக்கை திருடிச் செனற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, காமராஜர் நகர் திருமுருகன் வீதியைச் சேர்ந்தவர் அரவிந்தன், 26. டிப்ளமோ முடித்த இவர் வேலை தேடி வருகிறார். கடந்த மாதம் 17ம் தேதி காலை தனது பைக்கை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி எதிரில் நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் மாலை 6:00 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.