உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கம் புதுகாலனியைச் சேர்ந்தவர் தாமோதிரன், 47; தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த 29ம் தேதி மாலை அவரது பைக்கை (பி.ஒய்.01.பி.ஜே.7090) சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி எதிரில் நிறுத்திவிட்டு பள்ளி ஆண்டு விழாவிற்கு சென்றார்.மாலை 5:00 மணியளவில் வெளியில் வந்து பார்த்தபோது அவரது பைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி