உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

காரைக்கால்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் பெரும்பண்ணையூரைச் சேர்ந்தவர் உதயகுமார், 34. இவர், கடந்த 1ம் தேதி காரைக்கால், கிராம்புத்தோட்டம், மிடில் ஸ்ட்ரீட் பகுதியில் தனது ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. இது குறித்து உதயகுமார் அளித்த புகாரின் பேரில், நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !