போலீஸ் உட்பட 3 பேரின் பைக்குகள் திருட்டு
புதுச்சேரி: போலீஸ்காரர் உட்பட 3 பேரின் பைக்குகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மடுகரை, இந்திரா நகரை சேர்ந்தவர் சிவக்குமார்,25; கோரிமேடு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிந்து வருகிறார். இவர், கடந்த 11ம் தேதி, இந்திரா சிக்னல் அருகே பைக்கை, நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. வானுார், பொம்மையார்பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த், 28; தனியார் வங்கி ஊழியரான இவர், கடந்த 12ம் தேதி கடலுார் சாலையில் பைக்கை நிறுத்தவிட்டு மாலுக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. குயவர்பாளையத்தை சேர்ந்தவர் சுதர்னன்,27; தனியார் கம்பெனி ஊழியரான இவர், கடந்த 11ம் தேதி இரவு தனது வீட்டின் அருகில் பைக்கை நிறுத்தினார். மறுநாள் காலை பைக்கை காணவில்லை. இதுகுறித்த புகார்களின் பேரில் முறையே ரெட்டியார்பாளையம் மற்றும் உருளையன்பேட்டை போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து பைக் திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.