உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜ., கிளை கமிட்டி கூட்டம்

 முதலியார்பேட்டை தொகுதியில் பா.ஜ., கிளை கமிட்டி கூட்டம்

புதுச்சேரி: பா.ஜ., சார்பில், நகர மாவட்டத்திற்குட்பட்ட முதலியார்பேட்டை சட்டசபை தொகுதியில் கிளை கமிட்டி கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் ராமலிங்கம், செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் பாபு, மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், லட்சுமி நாராயணன் மாவட்ட பொறுப்பாளர் ரத்தினவேல், தொகுதி கிளைத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய தலைவர்கள், 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய, கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து முழுநேர பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். குறிப்பாக கிளைத் தலைவர்கள் அனைவரும் பிரதமர் நலத்திட்டங்களின் பயனாளிகளை நேரில் சந்தித்து, கட்சியின் சாதனைகள் மற்றும் அரசின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை