உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்

 அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்

புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதி பா.ஜ., சார்பில் பொதுமக்களுக்கு மாத காலண்டர் மற்றும் சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, அரியாங்குப்பம் தொகுதி பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். அரியாங்குப்பம் தொகுதி பா.ஜ., தலைவர் வசந்தராஜா, தொகுதி துணை தலைவர் அன்பழகன், பொது செயலாளர் முருகன், தொழிலதிபர் செந்தில்குமார், அரியாங்குப்பம் இளைஞர் அணி தலைவர் அருண் சபாபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரியாங்குப்பத்தில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மாத காலண்டர் மற்றும் சர்க்கரை பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை