உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., ஆலோசனை கூட்டம் 

பா.ஜ., ஆலோசனை கூட்டம் 

புதுச்சேரி: பா.ஜ., நகர மாவட்டம் சார்பில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவகத்தில் நடந்தது. மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். தேசிய செய்தி தொடர்பாளர் கேசவன் ஒரே நாடு ஒரே தேர்தல் நோக்கம் மற்றும் தேசத்தின் வளர்ச்சி குறித்து பேசினார். மாநில பொறுப்பாளர் அருள், இணை பொறுப்பாளர் நாகேஸ்வரன், துணைத் தலைவர் ஜெயலட்சுமி வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் வில்லியனுார் மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்த பாஸ்கர், பொதுச்செயலாளர் ஶ்ரீனிவாச பெருமாள், துணை தலைவர் உமாபதி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி