பா.ஜ., பிரமுகர் பிறந்த நாள் அமைச்சர் வாழ்த்து
வில்லியனுார்: உழவர்கரை தொகுதி பா.ஜ., பிரமுகர் அங்குதாஸ் பிறந்தநாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மூலகுளம் அடுத்த காரைகோவிந்தன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிகாந்தன், செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு, முன்னாள் சேர்மன் பாலமுருகன், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர்கள் மோகன்குமார், மவுலிதேவன், செயலாளர் சரவணன், மாநில விவசாய அணி தலைவர் ராமு, மாவட்ட தலைவர் லோகநாதன், தமிழ்மாறன், வெற்றிச்செல்வன், முன்னாள் கவுன்சிலர்கள் வீரமுத்து, மூர்த்தி, ஏம்பலம் தொகுதி நிர்வாகிகள் நந்தகுமார், சுகுமார், சதீஷ், அய்யனார், ராகவன், கிருஷ்ணன், ராஜசேகர், ஜெயமூர்த்தி, பிரகாஷ், மோகித் ரவிக்குமார், அன்பரசன், கங்காதரன், நடராஜன், அருள்முத்து உட்பட பலர் வாழ்த்தினர். பின், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றார். தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணா மலை, புதுச்சேரி சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். ஏழைகளுக்கு புடவை, கோர்க்காடு புஷ்பகாந்தி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.