மேலும் செய்திகள்
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை
16-Sep-2024
திருக்கனுார் ; மண்ணாடிப்பட்டு தொகுதியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் கே.ஆர்.பாளையம் சுதர்சன் மஹாலில் நடந்தது.முகாமை தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பின்னர், இத்தொகுதியில் பா.ஜ.,வில் அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க பூத் வாரியாகவும், நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்ற அறிவுறுத்தி, புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.மாநில வர்த்தக பிரிவு தலைவர் கலியபெருமாள், நிர்வாகிகள் மஞ்ஜினி, சிவக்குமார், தொகுதி தலைவர் வேதாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
16-Sep-2024