பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாமை ராமலிங்கம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ.,உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், எஸ்.பி., பட்டேல் சாலையில் நேற்று தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமை, ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.ராஜ்பவன் தொகுதி பா.ஜ., தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ., பொறுப்பாளர் ஆனந்த கண்ணன் ஓ. பி. சி., அணியின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாச பெருமாள், நிர்வாகிகள் மஞ்சினி, அருண்குமார், பாலா, விநாயகம், ராகுல், பிரகாஷ், மாலதி வள்ளி பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மணக்குள விநாயகர் வீதி, அரவிந்தர் ஆசிரமம் அருகே பா.ஜ.,வினர் குடை அமைத்து, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர்.