மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கவர்னர்
29-Nov-2025
புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டி பா.ஜ.,வினர் நேற்று கவர்னரிடம் மனு அளித்தனர். பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் மோகன்குமார், துணை தலைவர்கள் ரத்தினவேல், ஜெயலட்சுமி, பழனி, நிர்வாகிகள் அருள்முருகன், நாகேஸ்வர் ஆகியோர் நேற்று மதியம் 12:30 மணிக்கு மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர். அப்போது, புதுச்சேரியில் பூதாகரமாக வெடித்துள்ள போலி மருந்து விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டி மனு அளித்தனர். பின்னர் மாநில தலைவர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ள போலி மருந்து விவகாரத்தில் கவர்னர் தலையிட்டுள்ளதால், போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்டு பிடித்து 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இந்த மாபியா கும்பலையும், அவர்களுக்கு உதவியவர்களையும், அவர்களால் ஆதாயம் அடைந்தவர்களை கண்டுபிடித்து, கடும் தண்டனை வழங்க வேண்டும். அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அதற்கு, இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ., சார்பில், கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். போலி மருந்து தயாரிக்கும் கும்பலுக்கு யார் உடந்தையாக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், எந்த அதிகார மையத்தில் இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.,க்கு பரிந்துரைக்க வலியுறுத்தி உள்ளோம். கவர்னரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
29-Nov-2025