மேலும் செய்திகள்
பா.ஜ., இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை
13-Jan-2026
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் நேற்று முன்தினம் பா.ஜ., இளைஞர் அணியின் இணைப்பு விழா நடந்தது. இணைப்பு விழாவிற்கு, பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் மெல்வின் தலைமையில், 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பா.ஜ,வில் இணைந்தனர். இதில் மாநில இளைஞர் அணி தலைவர் ஆடலரசு, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன், உழவர்கரை மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜசேகர், மாவட்ட பொது செயலாளர் ரமணா சங்கர் , தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் கவிதா, மாநில இளைஞர் அணி துணை தலைவர் தமிழரசன், பொதுச் செயலாளர் அமல்ராஜ், விக்ரமாதித்தன், பொருளாளர் சித்தானந்து உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், பா.ஜ., இளைஞர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
13-Jan-2026